பிரபல நடிகர் ஷாம் திடீர் கைது - என்ன காரணம் ?

பிரபல நடிகர் ஷாம் திடீர் கைது - என்ன காரணம் ?

Update: 2020-07-28 09:00 GMT

தமிழ்சினிமாவில் ஜீவா இயக்கிய 12 பி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். மேலும் ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, விஜய் சேதுபதியின் புறம்போக்கு ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். நேற்று இரவு ஷாமின் விட்டில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடந்து கொண்டிருப்பது காவல் நிலையத்திற்கு தெரியவந்துள்ளது. போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தததையடுத்து விரைந்து ஷாம் வீட்டிற்கு சென்றனர்.

அப்போதே திடீர் சோதனை மேற்கொண்டனர். ஷாம் வீட்டில், ஷாம் உட்பட 13 பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போக்கர் எனப்படும் சூதாட்டத்தில் பணத்தை வைத்து விளையாடுவது தெரியவந்துள்ளது.  பணம் சீட்டுக்கட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் ஷாம் கைது செய்யப்பட்டார். அதனை அடுத்து தற்போது இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் சினிமா துறையில் இயக்குனர்கள், தொழிலதிபர்கள் நடிகர்கள் என பலர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது இது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News