லடாக்கிகள் என்று கூறி காங்கிரஸ்காரர்களை வைத்து பொய்களைப் பரப்பும் ராகுல் காந்தி!

லடாக்கிகள் என்று கூறி காங்கிரஸ்காரர்களை வைத்து பொய்களைப் பரப்பும் ராகுல் காந்தி!

Update: 2020-07-04 02:25 GMT

தேசப் பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் இத்தாலியர்களால் தலைமைதாங்கி வழிநடத்தப்படும் காங்கிரஸ் கட்சி இந்திய - சீன எல்லைப் பிரச்சனை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது.

இந்த வரிசையில் லேட்டஸ்டாக லடாக்கில் வசிப்பவர்களே சீனா இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று கூறுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் ராகுல் காந்தி.

"லடாக்கிகள் கூறுவது : சீனா நமது நிலப்பகுதியை ஆக்கிரமித்து விட்டது.

பிரதமர் கூறுவது : யாரும் நமது நிலப்பகுதி ஆக்கிரமிக்கவில்லை

இருவரில் யாரோ ஒருவர் பொய்யுரைக்கிறார்கள்" என்று பொருள்படும் படி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு‌ ஒரு‌ வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்ற சீன வீரர்களின் முயற்சியை தடுத்து நாட்டின் இறையாண்மையைக் காத்ததாக இந்திய அரசு கூறி வரும் நிலையில் எங்கே இதன் மூலம் மோடி அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்ற பதற்றத்திலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உடனான தொடர்புகளாலும் சீன ராணுவம் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது என்ற பொய்யை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது.

இந்த பொய்களை வலுப்படுத்த எண்ணி ராகுல் காந்தி பகிர்ந்த வீடியோவில் லடாக் வாசிகள் சீன ராணுவம் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது என்று கூறுவதாக வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் பேசியவர்களின் பின்னணியை ஆராய்ந்த போது, அவர்களில் பலர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் சிலர் லடாக்கைச் சேர்ந்தவர்களே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த வீடியோவில் ஏழாவதாக வரும் நபரின் பெயர் நம்க்யல் துர்பக் என்று வருகிறது. முன்னர் ஒரு‌ முறை பத்திரிகையாளர் பர்தா தந்தால் பேட்டி எடுக்கப்பட்ட போது இவர் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.

மேலும் ஐந்தாவதாக வரும்‌ நபர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI அமைப்பின் பொதுச்செயலாளர் என்பது மட்டுமல்லாமல் அவர் லடாக்கில் வசிப்பவரே அல்ல, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக டுன்டுப் நுபு என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நபர் லே பகுதியின் மாவட்ட காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் என்றும் டோர்ஜெய் க்யால்டசன் என்ற பெயரில் வீடியோவில் வரும் நபர் மாவட்ட இளைஞரணி செயல் தலைவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி தான் தேச விரோதமாக நடந்து கொள்வது மட்டுமில்லாமல் தனது கட்சிக்காரர்களையும் அவ்வாறு நடந்து கொள்ளத் தூண்டுவது ராகுல் காந்தியின் இத்தாலி பாசத்தையே காட்டுகிறது என்று நாட்டுப் பற்றாளர்கள் அவரை சாடி வருகின்றனர்.

Similar News