ஆறாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி கட்டாயம் - கல்வித்துறையில் புது புரட்சியை உண்டாக்கப்போகும் மத்திய அரசின் திட்டம்!

ஆறாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி கட்டாயம் - கல்வித்துறையில் புது புரட்சியை உண்டாக்கப்போகும் மத்திய அரசின் திட்டம்!

Update: 2020-07-29 05:17 GMT

6ஆம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கல்வி கற்பதை கட்டாயமாக்கும் புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து மத்திய அமைச்சரவை இன்று விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6ஆம் வகுப்புக்கு பிறகு விருப்பப் பாடமாக தாய்மொழிக் கல்வியைப் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை தொடர்ந்து, கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவானது, புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019யை கடந்த ஆண்டு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டு என்று கூறப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, இந்தி கட்டாயம் என்பதை நீக்கிவிட்டு, மாணவர்கள்  விரும்பினால் தேர்வு செய்து படிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு பிறகு நாடு முழுவதும் மக்களிடமிருந்து கருத்து கேட்கும் பணி தொடங்கியது. இதில் 2 லட்சம் பேர் புதிய  கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய அரசு, அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது.

அதன் ஒரு பகுதியாக 6ஆம் வகுப்பு வரையில் பள்ளி குழந்தைகளுக்கு கட்டாயம் தாய் மொழிக் கல்வி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8ஆம்  வகுப்புக்கு பிறகு மாணவர்கள் விரும்பினால் தொடர்ந்து தாய் மொழியை படிக்கலாம், இல்லையென்றால் வேறு மொழியை தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

கல்வித்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 % முதலீட்டை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிக் கல்வியில் 100 % அளவிற்கும், உயர்கல்வித்துறையில் 50 % அளவிற்கும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சர்வதேச பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் நோக்கில் பல்வேறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர பள்ளிப்படிப்பை தாண்டி உள்ளூர் அளவில் கலை மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த திறன்களில் சிறந்து விளங்கும் சிறுவர், சிறுமிகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் விதமான பள்ளிகளை தொடங்குவது போன்ற பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இந்த வரைவு குறித்து, இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News