வீதியில் செல்லும் வயதான ஒருவருடன் செம ரகளை செய்யும் நடிகர் ஆதி - நடந்தது என்ன.!

வீதியில் செல்லும் வயதான ஒருவருடன் செம ரகளை செய்யும் நடிகர் ஆதி - நடந்தது என்ன.!

Update: 2020-07-25 12:58 GMT

நடிகர் ஆதி, வீதியில் செல்லும் வயதான ஒருவருடன் செய்யும் அட்டகாச வீடியோ வைரலாகி வருகிறது.

"ஒக்க வி சித்திரம்" எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஆதி.இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான 'மிருகம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அரவாண், வல்லினம், கோச்சாடையான் என பல படங்களில் நடித்து வந்தாலும், மரகத நாணயம் ஆதிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

நடுரோட்டில் செம ரகளை இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் செம ரகளையான வீடியோ ஒன்றை நடிகர் ஆதி வெளியிட்டுள்ளார். அதில், சாலையில் சுற்றி வரும் வயதானவர் ஒருவருடன், நடுரோட்டில் இறங்கி, சண்டை போடுவது போல நடிகர் ஆதியும், அந்த பெரியவரும் செய்யும் சேட்டைகள் பார்போரின் மனதை கொள்ளையடிக்கிறது.

அந்த வீடியோவில், மாஸ்க் அணிந்தபடி, ஆதி செய்வது போலவே செய்து வந்த அந்த வயதானவர் திடீரென நாமும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்றுவந்துள்ளது.

பொல்லாதவன் பாடல் பேக்ரவுண்டில் ஓடிய படி இருக்கும் இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, "காசு பணம் தேவை இல்லை தலைவா". "உன் அன்புக்கு நான் அடிமை" என நடிகர் ஆதி கேப்ஷன் கொடுத்துள்ளது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

Similar News