சீனாவிடமிருந்து நிறுவனங்களை ஈர்க்க முடியும்... பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது.! அமெரிக்க வெளியுறவு செயலர் புகழாரம்.!

சீனாவிடமிருந்து நிறுவனங்களை ஈர்க்க முடியும்... பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது.! அமெரிக்க வெளியுறவு செயலர் புகழாரம்.!

Update: 2020-07-23 08:58 GMT

அமெரிக்கா இந்தியா வர்த்தகக் கவுன்சில் (USIBC) நடத்திய இந்தியா ஐடியாஸ் மாநாட்டில் முக்கிய உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ, இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளதால், சீனாவிடமிருந்து சப்ளை சங்கிலிகளைப் பிரித்து தன் பக்கம் கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பியோ மேலும் கூறுகையில், இதன் விளைவாக தொலைதொடர்பு மற்றும் சுகாதாரத் துறையில் சீனாவை சார்ந்திருப்பதை பெருமளவு குறைக்க முடியும் என்கிறார்.

"இந்தியா இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம், அமெரிக்கா உட்பட பலநாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது தான்." என்று தெரிவித்திருக்கும் அவர், இந்தியாவும், அமெரிக்காவும் சீனா விடுத்திருக்கும் சவால்களை சந்திக்க இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஆலோசனைக்காகவும், விவாதத்திற்காகவும் தான் வழக்கமாக கூப்பிடுவது அமெரிக்காவின் நம்பிக்கைக்குகந்த நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவின் தலைவர்களைத் தான் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணி நேரங்களில் மூட அமெரிக்கா உத்தரவிட்ட நேரத்தில், இந்த பேச்சுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Times Of India

Similar News