அவசரப்பட்டு நாட்டையே பறிகொடுத்த இம்ரான் கான் - பாகிஸ்தானில் அமலுக்கு வருகிறது சீனாவின் ஆட்சி!

அவசரப்பட்டு நாட்டையே பறிகொடுத்த இம்ரான் கான் - பாகிஸ்தானில் அமலுக்கு வருகிறது சீனாவின் ஆட்சி!

Update: 2020-07-28 03:44 GMT

இம்ரான் கானை பயன்படுத்தி பாகிஸ்தானை தனது அதிகார பிடியில் கொண்டுவரும் திட்டத்தில் சீனா வெற்றி பெற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இறுதிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு முதல், சீன பிரதமர் ஜி ஜின்பிங், சீனா-பாகிஸ்தான் பொருளாதார திட்டம் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி திட்டங்களை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

அதன் படி பாகிஸ்தானின் ஒட்டுமொத்த திட்ட அமலாக்க அமைச்சகமும் சீனாவின் கட்டுப்பாட்டில் வரும் என சொல்லப்படுகிறது.

அத்துடன் பாகிஸ்தான் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டனை விதிக்கும் அரசியலமைப்பு அதிகாரமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை நவாஸ் ஷெரீப் அரசாங்கம் நிராகரித்த போதிலும், அதை இறுதியாக பிரதமர் இம்ரான் கான் ஏற்றுக்கொண்டார்.

ஆசியா டைம்ஸில் வெளியிடப்பட்ட அலி சல்மான் அந்தானி எழுதிய ஒரு கட்டுரையின் படி, இராணுவ ஆட்சியின் கைப்பாவையான கான், பாகிஸ்தானில் சீனா முழுமையாக அதிகாரம் செலுத்த அனுமதிப்பது தெரிய வந்துள்ளது.

2050 வாக்கில், வளர்ந்து வரும்-சந்தை பொருளாதாரங்களின் பெரும்பகுதியை இறுதிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.

Similar News