வருமானவரி அலுவலர் பதவிக்கு போலி பணிநியமன ஆணை.!

வருமானவரி அலுவலர் பதவிக்கு போலி பணிநியமன ஆணை.!

Update: 2020-07-15 11:53 GMT

வருமானவரி அலுவலர் பதவிக்கு பணிநியமன ஆணையை தில்லி தலைமை வருவாய் ஆணையர் வழங்கியிருப்பதாக, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த ஆணைகள் போலியானவை என்று சென்னை வருமானவரித் துறையின் கூடுதல் ஆணையர் பி.திவாகர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வருமானவரி அலுவலர் பதவியானது, இத்துறையில் பதவி உயர்வின் மூலம் மட்டுமே நிரப்பப்படுவதாகவும், நேரடி நியமனம் கிடையாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

வருமானவரித் துறையில், கெசட்டட் அல்லாத பல பதவிகளுக்கு பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்- எஸ்எஸ்சி) வாயிலாகவும், கெசட்டட் பதவிகளுக்கு, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வாயிலாகவும், விதிமுறைகளின்படி நியமனம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நியமன முறையில் ஏதேனும் ஐயம் இருந்தால் எஸ்எஸ்சி, யூபிஎஸ்சி ஆகியவற்றின் அலுவலக இணைய தளங்களை சரிபார்க்குமாறும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் வருமானவரி கூடுதல் ஆணையர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

Similar News