திரையரங்குகள் திறக்கப்படுகிறதா? - ரசிகர்கள் மகிழ்ச்சி.!

திரையரங்குகள் திறக்கப்படுகிறதா? - ரசிகர்கள் மகிழ்ச்சி.!

Update: 2020-07-14 12:22 GMT

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு கடையடைப்பு, பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனை அடுத்து கொரோனா தொற்று குறைய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இப்பொழுது மற்ற தொழில்கள் ஓரளவிற்கு மீண்டு வந்தாலும் சினிமாத்துறை அப்படியேதான் இருக்கிறது. ஆனால் தியேட்டர்கள், படப்பிடிப்புகளுக்கு தொடங்குவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சினிமா கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் தியேட்டர் ஓனர்கள் ஆகியோர் வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் தியேட்டர்கள் திறக்கச் சொல்லி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி திரையரங்கள் திறக்கப்பட்டால் சிறியவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையே இடைவெளி விட்டும் அமர வேண்டும். சானிட்டைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதை அறிந்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar News