சிங்கப்பூரில் இந்தியா வம்சாவளி செவிலியருக்கு ஜனாதிபதி விருது!

சிங்கப்பூரில் இந்தியா வம்சாவளி செவிலியருக்கு ஜனாதிபதி விருது!

Update: 2020-07-23 11:49 GMT

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் எதிரான போராட்டத்தில் தீவிரமாக போராடிதற்காக தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியான பெண் செவிலியருக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

கால நாராயணசாமிக்கு 59 வயது ஆகிறது. இவர் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்துவதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலா நாராயணசாமி உடன் சேர்த்து ஐந்து செவிலியர்களுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து பேருக்கும் அந்த நாட்டின் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கையெழுத்திட்ட சான்றிதழ், கோப்பை மற்றும் பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரில் கொரோனா வைரசால் இதுவரை 49ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 27 பேர் உயிரிழந்துள்ளனார்.  

Similar News