உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட இரண்டடுக்கு சரக்கு ரயில் குகைப்பாதை - இந்திய ரயில்வே சாதனை!

உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட இரண்டடுக்கு சரக்கு ரயில் குகைப்பாதை - இந்திய ரயில்வே சாதனை!

Update: 2020-07-26 02:29 GMT

உலகின் முதல் இரண்டடுக்கு சரக்கு ரயில் சேவையை இயக்கக் கூடிய மின்மயமாக்கப்பட்ட குகைப்பாதையை கட்டி முடித்து இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த குகைப் பாதை கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட தடைகளையும் மீறி ஒரு வருடத்திற்குள் ‌கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ரயில்வேயின் அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ரேவாரி-தாத்ரி பகுதியில் மலைப்பாங்கான ஆரவல்லி மலைத்தொடரில் இந்த குகை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் ஹரியானா மாநிலத்தின் மேவாட் மற்றும் குருகிராமை இணைக்கும் இந்த குகைப் பாதையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் 25 டன் அளவிலான எடையைத் தாங்கிச் செல்லும் திறனுள்ள இரண்டடுக்கு சரக்கு ரயில்கள் மணிக்கு 100கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது.

250 முதல் 500 வருடங்கள் பழமையான‌ கடினப்பட்டுப் போன பாறைகளைக் குடைந்து இந்தப் பாதை உருவாக்கப்பட்டுள்ளதால் புவியியல் ரீதியாக முற்றிலும் பாதுகாப்பானது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் போக்குவரத்து ரயில் பாதைகள் தான் இந்திய ரயில்வே கையில் எடுத்துக் கொண்ட திட்டங்களிலேயே மிகப் பெரிய அளவிலானவை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ரயில் பாதைகளையும் 2021ம் ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் வகையில் பணிகளை முடிக்க ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

Similar News