தெலுங்கானா முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையை விட தமிழகத்தில் ஒன்பது மாவட்டத்தில் அதிக பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது.!

தெலுங்கானா முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையை விட தமிழகத்தில் ஒன்பது மாவட்டத்தில் அதிக பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது.!

Update: 2020-07-24 11:59 GMT

தெலுங்கானா மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனைகளை விட தமிழகத்தில் ஒன்பது தென் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் அதிகமாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாவட்டங்களான தேனி, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டத்தில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 278 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தின் மக்கள் தொகையில் 2.91 சதவீதம் ஆகும்.

ஆனால், தெலுங்கானா மாநிலம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 22 ஆயிரத்து 326 கொரோனா பரிசோதனை மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 21.57 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பின்னர் தமிழ்நாட்டில் குணமடைவோர் விகிதம் 70.89 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

Similar News