தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறப்பது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்.!

தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறப்பது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்.!

Update: 2020-07-17 12:54 GMT

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தியேட்டர்கள் மீண்டும் திறப்பது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை.

இதனால் சில திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

இந்நிலையில் தென்காசியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியது: கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக குறைந்தும் மற்றும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு தான் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தியேட்டர்கள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் முடிவடையும் வரை சினிமா ரசிகர்கள் ஓடிடியில் தான் படங்களை பார்க்கும் நிலையில் உள்ளது.   

Similar News