சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொண்ட மூத்த நடிகர் கொரோனாவால் மரணம் - அதிர்ச்சியில் சின்னத்திரை.!

சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொண்ட மூத்த நடிகர் கொரோனாவால் மரணம் - அதிர்ச்சியில் சின்னத்திரை.!

Update: 2020-07-19 08:01 GMT

கொரோனாவுக்கு மூத்த நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் இருக்கிறது. எனினும் பல தொழில்களில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சினிமா துறையில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில் இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர், அமிதாப்பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோரும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கன்னட திரையுலகின் மூத்த நடிகர் ஹுலிவானா கங்காதர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 70. இவர் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களிலும் 150-க்கு மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரேம லோகா என்ற டிவி தொடருக்கான படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதை அறிந்த இவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இவர் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அவரைக் கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இவருக்கு 3 மகள்களும் ஒரு மகன் உள்ளார்.

இவர் மறைவிற்கு ரசிகர்களும், நடிகர்,நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மூத்த நடிகர் ஒருவர் கொரோனாவுக்குப் பலியாகி இருப்பது திரையுலகில் பரபரப்பாகி இருக்கிறது.

Similar News