'ஒன்றே குலம், ஒன்றே குளமான வரலாறு' - எந்நேரமும் குளம், ஆறு, ஏரி, கான்ட்ராக்ட் என ஊழல் நினைப்பில் இருக்கிறதா தி.மு.க?

'ஒன்றே குலம், ஒன்றே குளமான வரலாறு' - எந்நேரமும் குளம், ஆறு, ஏரி, கான்ட்ராக்ட் என ஊழல் நினைப்பில் இருக்கிறதா தி.மு.க?

Update: 2020-07-21 15:53 GMT

தமிழை வளர்த்தோம், தமிழை பாதுகாத்தோம், தமிழால் வளர்ந்தோம், நாங்கள் தமிழர்கள், தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் வாட்சு என மேடைக்கு மேடை பறைசாற்றி தமிழினத்தின் காப்பான் போல் காட்டிக்கொண்ட தி.மு.க-விடம் இன்று தமிழ் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறது.

ஆம், கட்சி தலைவரின் உரை மட்டுமல்ல கட்சி அறிக்கைகளும் உளறல்தான்! தி.மு.க இளைஞரணி சார்பில் ஒரு அறிக்கை விடப்பட்டது. அதில், தமிழின் பாரம்பரியமிக்க கூற்றான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற புகழ்பெற்ற வாக்கியம் "ஒன்றே குளம் ஒருவனே தேவன்" என உளறல் அச்சாக வெளிவந்தது.

இதில் பாராட்டப்படகூடிய அம்சம் என்னவென்றால் அதனை தி.மு.க இளைஞரணி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட தமிழை தன் தலைப்பிள்ளையாய் வளர்த்த மு.கருணாநிதியின் பேரன் பட்டத்து இளவரசர் உதயநிதி அதனை ரீட்விட் செய்து பரப்பியதுதான் ஆகச்சிறந்த ஹைலைட்டே!

இதை கடுமையாக சாடியுள்ளார் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா. இதுகுறித்த அவரது ட்வீட்:

எந்நேரமும் குளம், ஆறு, ஏரி, கான்ட்ராக்ட், ஊழல் என நினைப்பில் இருக்கிறதா தி.மு.க? வேறு என்ன ஞாபகம் இருக்க முடியும்?? என கலாய்த்து தள்ளுகின்றனர் நெட்டிசன்கள்.



Similar News