காஷ்மீரில் பன்னாட்டு எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பூர்வீக மக்களுக்கு முதன் முதலாக இட ஒதுக்கீட்டு சலுகைகள் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!

காஷ்மீரில் பன்னாட்டு எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பூர்வீக மக்களுக்கு முதன் முதலாக இட ஒதுக்கீட்டு சலுகைகள் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!

Update: 2020-07-09 02:43 GMT

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் வசிப்பவர்களில் பெரும்பாலும் அதிகம் படிக்காத மலைவாசி மற்றும் வன ஆதிவாசி முஸ்லிம்கள் அதிகம்பேர் உள்ளனர். எல்லை பிரச்சினைகளில் அடிக்கடி துன்பப்படுபவர்கள் இவர்கள், பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள்.

இவர்களின் நலன் குறித்து இதற்கு முன்பு இருந்த காஷ்மீர் பள்ளத்தாக்குப் பள்ளத்தாக்கை சேர்ந்த வளமான நிர்வாகிகள் சிந்தித்ததில்லை. இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு மட்டும் விசேஷமாக அளிக்கப்பட 370 அரசியல் சட்டப்பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மத்திய அரசின் நேரடி கண்காணிப்புக்கு உட்பட்ட மாநிலமாக உள்ளது.

இந்த நிலையில் இவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் தேர்வு வாரியத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளில் இடஒதுக்கீடு கிடைக்கும் என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்த சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் யூனியன் பிரதேச நிர்வாகம் விரிவான அறிக்கை வெளியிடும் என்றும் ஜிதேந்திர சிங் கூறினார். யூனியன் பிரதேச அரசு இதை தெளிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் குரூப் 4 ஊழியர்களுக்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சுமார் 8500 காலியிடங்களை விளம்பரப்படுத்தியுள்ளது மேலும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1900 அலுவலக உதவியாளர்கள் காலி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

Similar News