எம்.எஸ் டோனி இருக்கும்போது நான் எப்படி விக்கெட் கீப்பிங் செய்ய வந்தேன் - முழு தகவலை தெரிவித்த விராட் கோலி.!

எம்.எஸ் டோனி இருக்கும்போது நான் எப்படி விக்கெட் கீப்பிங் செய்ய வந்தேன் - முழு தகவலை தெரிவித்த விராட் கோலி.!

Update: 2020-07-31 11:46 GMT

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான பேட்ஸ்மேன்களில் ஒருவர் தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் ஒருநாள் போட்டி, டி20 போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய மூன்றிலும் சிறப்பாக விளையாடுபவர். ஒருநாள் கிரிக்கெட்டில் உலக அளவில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

விராட் மட்டுமல்லாமல் பீல்டிங்கிளும் சிறப்பாக செயல்படுவார். சில சமயங்களில் இந்திய அணிக்காக பந்து வீசுவார். விராட் கோலி ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அந்தத் தகவலைப் பற்றி இந்திய அணியின் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலுடன் விராட் பகிர்ந்துகொண்டார். 2015 ஆம் ஆண்டு வங்களதேசம் அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ். டோனி தான் விக்கெட் கீப்பிங் செய்து வந்தார். அந்த போட்டியின் 44வது ஓவரில் என்னை விக்கெட் கீப்பிங் செய்யும்படி தெரிவித்துவிட்டு உடை மாற்றும் அறைக்கு டோனி சென்றுவிட்டார்.

அந்த 44 வது ஓவரை உமேஷ் யாதவ் பந்துவீசினார். அவர் வீசும் போது ஒரு ஒரு பந்தும் மிக வேகமாக ஸ்டம்புக்கு பின்னால் என்னை பார்த்து வந்தது. அந்தப் பந்து என்னுடைய முகத்தில் பட்டு விடுமோ என்ற சந்தேகமும் இருந்தது. அதனால் ஹெல்மெட் அணியலாம் என்று நினைத்தேன். ஆனால், புழக்கம் அதிகமாக இருந்ததால் ஹெல்மெட் அணியமால் விட்டுவிட்டேன்.


அந்த சமயத்தில் தான் எனக்கு தெரிந்தது கேப்டன் மட்டும் விக்கெட் கீப்பராக செயல்படுவதும் மற்றும் பீல்டிங்கில் செட் செய்வதும் எவ்வளவு கடுமையான விஷயம் என்று. அந்த ஒரு ஓவர் தான் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்ய எம்.எஸ் டோனி தான் காரணம் என தெரிவித்துள்ளார். 

Similar News