CMC கிறிஸ்தவ கல்லூரியில் ராகிங் விவகாரம்: தப்பு செய்தவர்களை காப்பாற்றும் நிர்வாகம்!

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியின் ராகிங் விவகாரம் தப்பு செய்தவர்களை காப்பாற்றும் நிர்வாகம்.

Update: 2022-12-09 05:06 GMT

இந்தியாவில் பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனையான கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை ராகிங் செய்யும் வீடியோ தான் அது. "எங்கள் கல்லூரி விடுதிகளில் நடக்கும் ராகிங்கை பாருங்கள்" என்று தலைப்புடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது. இது குறித்த செய்தியின் நவம்பர் 12 தேதி ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.


இந்தநிலையில், ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களான ஸ்ரீகாந்த், அன்பு சாலமன் டினோ, பஹத் சிங், தக்க ஸ்டாலின் பாபு, கிருஷ்ண சைதன்யா ரெட்டி, ஜனார்த்தனன் அழகர்சாமி, முனிராஜுலு ஏனோஷ் அன்பிஷேக் ஆகிய 7 பேரையும் வெள்ளிக்கிழமை ஸ்டேஷன் ஜாமீனில் பாகாயம் காவல்துறையினர் விடுவித்தனர். மேலும், போலீசார் சம்மன் அனுப்பும் போது விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


"தேவைப்பட்டால் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்துவோம் அல்லது வழக்கில் தொடர்புடையவர்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வரச் சொல்வோம்" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Input & Image courtesy: Nakkheeran News

Tags:    

Similar News