அனைத்து விதமான நோய் தொற்றுகளை எதிர்கொள்ளும் சக்தி இதற்கு உண்டாம் !
Coconut Oil benefits and healthcare tips.
அல்சைமர் நோயின் ஆபத்தைக் குறைப்பது என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவதால், நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும். நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. 8 வாரங்களுக்கு தினமும் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொண்டால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தேங்காய் எண்ணெய் அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொண்டால், இதிலிருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். தேங்காய் எண்ணெயை தினமும் சமையலுக்கு மட்டுமல்லாது, உங்கள் முடிக்கும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் சரும பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டிருப்பதால், இதை நீங்கள் சருமத்தில் தடவிக்கொண்டால், உங்களுக்கு சரும வறட்சி, சருமம் வெளுத்தல் போன்ற பிரச்சினைகள் எல்லாம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கல்லீரல் நோயைக் குணப்படுத்த தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்த தேங்காய் எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது என்பதால் இது உங்களுக்கு பல தொற்று பிரச்சினையிலிருந்தும் நிவாரணம் கொடுக்கும். பற்களின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நன்மை தரக்கூடியது.
Image courtesy:wikipedia