இந்தியாவில் முதலீடு திட்டங்கள் கவர்ச்சிகரமாக உள்ளது: வெளிநாட்டு வாழ் இந்தியருடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர்!
பிரவாசி பாரதி திவாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் உள்ள முதலீடுகள் பற்றி எடுத்துரைத்தார் மத்திய அமைச்சர்.
பிரவாசி பாரதி திவாஸ் என்பது புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான ஒரு நிகழ்ச்சியாகும். இதை வருட, வருடம் மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்ச்சி. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பெரிய இந்தியாவின் வாய்ப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவிற்கான வாய்ப்பில் பங்கேற்க வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், பெரிய நுகர்வு சந்தை மற்றும் திறமையான இளைஞர்களால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். நியூஜெர்சியில் பிரவாசி பாரதிய திவாஸ் 2023 முன்னிட்டு புலம்பெயர்ந்தோரிடையே உரையாற்றிய அமைச்சர், இந்திய அமெரிக்க சமூகத்தை உலகின் இரண்டு துடிப்பான ஜனநாயக நாடுகளுக்கு இடையே வாழும் பாலம் என்று கூறினார்.
மற்ற எந்த நாட்டையும் விட சிறந்த வருமானத்துடன் இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். இந்திய பங்குச்சந்தையில் உள்ள பல இந்திய நிறுவனங்கள் 20 ஆண்டுகளில் 20 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News