சாமானிய மக்களும் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள்: மத்திய அமைச்சர் பெருமிதம்!
நாட்டின் தற்போது சாமானிய மக்களும் மிக உயர்ந்த பதவியில் வகிக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றினார். நாட்டில் தற்பொழுது புதிய பாரம்பரிய கலாச்சாரம் நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக சாதாரண பின்னணியில் பிறந்த சாதாரண வாழ்க்கை நடத்துபவர்கள் தற்பொழுது உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் திரௌபதி ஒரு ஆசிரியர் ஒடிசாவின் பழங்குடியின பகுதிகளில் ஒரு சிறிய பள்ளியில் பணியாற்றிய அவர், தற்பொழுது குடியரசு தலைவராக ஆகி இருக்கிறார்.
ஒரு விவசாயின் மகன் தற்பொழுது எங்களது குடியரசு துணைத் தலைவர், நமது பிரதமர் டீ விற்பவர் வீட்டில் பிறந்தவர், சிறுவயதில் ரயில் நிலையத்தில் தீ விற்றவர். அதை செய்து கொண்டே படித்தார். அவர் தனது வாழ்நாளில் ஐந்து சகாப்தங்களுக்கு மேலாக சமூக மற்றும் தேசத்திற்காக பாடுபட்டு இருக்கிறார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் முன்னதாக நியமன P. T. உஷா மக்களவையில் பேசுகையில், ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மக்கள் மீதான அக்கறைக்கான பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். நமது குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பது தேசத்திற்கு கிடைத்த பெருமை. பழங்குடியின சமுதாயத்திற்கு இது ஒரு மிகப்பெரிய கௌரவம். ஒரு விவசாயின் மகன் தற்பொழுது துணை ஜனாதிபதி, இது ஒரு புதிய இந்தியா என்று அவர் கூறியிருக்கிறார். எனவே மக்கள் தற்பொழுது தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் உயர்ந்த இடத்திற்கு வர முடியும் என்பது நிறுவனம் ஆகி இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar