காட்டுநாயக்கன் சமூகம்: சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டரிடம் மனு!

காட்டுநாயக்கன் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு கூடியிருந்தார்கள்.

Update: 2022-05-11 02:20 GMT

கள்ளக்குறிச்சி பகுதியை அடுத்துள்ள காட்டுநாயக்கன் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். சாதி சான்றிதழ் என்பது ஒரு இன்றியமையாத சான்றிதல் ஆகவே அமைந்துள்ளது. குழந்தைக்கு கல்வி கற்பது முதல் மற்றும் அரசு சலுகைகளைப் பெறுவது வரை அனைத்திலும் சாதி சான்றிதழ் என்பது இன்றியமையாத ஒன்றாகவே அமைந்துவிட்டது. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி பகுதியை அடுத்துள்ள காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாத காரணத்திற்காக மக்கள் ஒன்று கூடி உள்ளார்கள். 


மேலும் இந்த சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் குறிப்பாக படிக்கின்ற மாணவர்கள் வரையிலும் அனைவரும் கூட்டமாக சேர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர்கள் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த எங்களின் பிள்ளைகள் படிப்புகளுக்கு உதவும் வகையிலும், மேலும் அரசின் சலுகைகளைப் பெறும் வகையிலும் சாதி சான்றிதழ் என்பது தேவைப்படுகிறது. 


பலமுறை வருவாய் அலுவலரிடம் தொடர்பு கொண்ட பிறகும் எங்களுக்கு இன்னும் சாதிசன்றிதழ் வரவில்லை. எனவே தகுந்த முறையில் நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழை பெற்று தருமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். 

Input & Image courtesy:Dinamalar News

Tags:    

Similar News