'என் மண் என் மக்கள்' யாத்திரையில் அண்ணாமலையிடம் குவிந்த புகார் மனுக்கள் -பா.ஜ.க மீது மக்கள் கொண்ட நம்பிக்கை!
'என் மண் என் மக்கள்' யாத்திரை வாயிலாக 52 நாட்களில் 20 ஆயிரம் பேரிடம் புகார் மனு அண்ணாமலை பெற்றுள்ளார்.
தமிழ்நாடு மாநில பாmஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்னும் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். பரமக்குடி ,சிவகங்கை , மானாமதுரை, காரைக்குடி ,அறந்தாங்கி, மேலூர் மதுரை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் விருதுநகர், சிவகாசி, திருச்செந்தூர் தூத்துக்குடி, நெல்லை, ஆலங்குளம், தென்காசி, நாகர்கோவில் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதயாத்திரையை அண்ணாமலை நிறைவு செய்துள்ளார்.
தற்பொழுது மூன்றாம் கட்ட யாத்திரையயை அண்ணாமலை தொடங்கியுள்ளார். நேற்று கரூரில் பாதயாத்திரை மேற்கொண்டார் . இன்று கிருஷ்ணராயபுரம், குளித்தலையில் பாதயாத்திரை நடத்துகிறார். இதுவரை 92 சட்டசபை தொகுதிகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரை அண்ணாமலை சந்தித்துள்ளார். அண்ணாமலையின் இந்த பாதயாத்திரைக்கு பெரும் வரவேற்பு ஆதரவும் கிடைத்துள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செல்லும் இடமெங்கும் பொது மக்களும் இளைஞர்களும் அண்ணாமலையுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் பரிசுகளை வழங்கவும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
சமீபத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் அண்ணாமலைக்காக தான் வடிவமைத்த செருப்பை அவருக்கு பரிசாக வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை சாலையில் அமர்ந்து செருப்பை அணிந்து கொண்டு பயணம் மேற்கொண்டார். மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட நெசவு தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதேபோல் அண்ணாமலையின் பாதுகாத்திரையின் போது பா.ஜனதா தொண்டர்களும் பொதுமக்களும் புகார் மனுக்களை அவரிடம் வழங்குகின்றனர்.