ஜப்பான் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி ஜப்பான் மொழியில் வாழ்த்து!
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடா 64, தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடா 64, தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
ஜப்பானில் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று அதிகரிப்பால் பல்வேறு நெருக்கடிகளை அந்நாடு சந்தித்து. இதன் காரணமாக ஜப்பான் பிரதமராக பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் ஹோஷிஹைடி சுகாவுக்கு சொந்தக் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. சமீபத்தில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புமியோ கிஷிடாவிடம் சுகா தோல்வியை சந்தித்தார். இதன் காரணமாக சுகா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுங் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களின் பெரும்பான்மையுடன் புமியோ கிஷிடா வெற்றி பெற்று புதிய பிரதமராக தேர்வானார். தனது தலைமையின் கீழ் அமைச்சரவையும் அமைத்துள்ளார்.
இந்நிலையில், ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடோ பொறுப்பேற்றதற்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது: புமியோ கிஷிடா தலைமையில் இந்தியா, ஜப்பான் கூட்டுறவு மேலும் வலுப்பெற்று ஆசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதில் ஜப்பான் மொழி மற்றும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Pm Modi Twiter
Image Courtesy: Dinamalar