வன்முறையை தூண்டும் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் - பிரதமர் மோடி!

வன்முறையை தூண்டும் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் - பிரதமர் மோடி!

Update: 2019-12-16 05:50 GMT

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசினார்,பாகிஸ்தான், ஆப்கான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்ததால் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளான முஸ்லீம்கள் அல்லாத சிந்தி, சீக்கியர், இந்துகள், உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமைச் சட்டம் உதவும் என்று அவர் தெரிவித்தார்.


திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வன்முறைத் தீயை மூட்டி வருவதாக குற்றம் சாட்டினார். வடகிழக்கு மாநில மக்கள் வன்முறையை விரும்பவில்லை என்றும் இதனை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்,சட்டத்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாலேயே, அந்த சட்டம் சரியானதுதான் என ஆயிரம் சதவீதம் உறுதியாவதாக தெரிவித்தார்.


பொதுச் சொத்துகளுக்கு தீ வைப்பவர்களை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிவதாக மோடிகூறினார். போராடுவோர் அணிந்திருக்கும் உடைகளில் இருந்தே அவர்கள் யார், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண முடிவதாகவும் மோடி குறிப்பிட்டார்.




https://twitter.com/ANI/status/1206149473929289729?s=19

Similar News