கொரோனா விவகாரத்தில் எந்த உதவியும் செய்யாமல் காங்கிரஸ் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது: பா.ஜ.க. கடும் குற்றச்சாட்டு..

கொரோனா விவகாரத்தில் எந்த உதவியும் செய்யாமல் காங்கிரஸ் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது: பா.ஜ.க. கடும் குற்றச்சாட்டு..

Update: 2020-04-14 07:04 GMT

பிரதமர் கொரோனா நிதிக்கு ஏராளமானோர் தாராளமான மனதுடன் நிதி உதவி அளித்து வரும் நிலையில் காங்கிரஸ் நிதி சேர்க்கை தொடர்பாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன், சிறப்பு நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மாவும் விஷமத்தனமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதற்கு பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:- கொரோனா வைரசால் நாடே பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் மனித இனத்தை காப்பதில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு மோடி தலைமையிலான அரசு எண்ணற்ற உதவிகளை அளித்து வருகிறது. இலவச ரேஷன் பொருட்கள், நிதி தொகுப்புகள் மற்றும் இலவச சமையல் கியாஸ் வழங்கி வருகிறது. பா.ஜனதாவும், உணவு பொருட்களையும், முக கவசங்களையும் பாதிக்கப்படும் மக்களுக்கு நேரிடையாக வழங்கி வருகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சி எந்த ஒன்றையும் செய்யாமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அரசு மீது இல்லாத பொல்லாத குறைகளை கண்டுபிடித்து கொரோனாவுக்கு எதிரான போரில், எதிர்மறையாக செயல்பட்டு வருகிறது. மக்களை திசைதிருப்பி வருகிறது.

காங்கிரசின் எதிர்க்கட்சிக்கான பணி, கேள்விக்குறியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த கீழ்த்தரமான அரசியலை கைவிட்டு, அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News