கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி தூக்கி எறிவதுதான் காங்கிரஸின் வேலை - பிரதமர் மோடி கடுமையான தாக்கு!

கூட்டணி கட்சிகளை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதே காங்கிரசுக்கு வேலை என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கியுள்ளார்.;

Update: 2024-03-18 10:49 GMT

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக நேற்று அவர் ஆந்திர மாநிலத்துக்கு சென்றார் அங்கு பல்நாடு மாவட்டத்தில் உள்ள பொப்புடி கிராமத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அனைவரையும் அழைத்துச் செல்கிறோம். ஆனால் மறுபடியும் காங்கிரஸ் கட்சியின் ஒரே செயல் திட்டம் கூட்டாளிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் தூக்கி எறிவதும் தான். இன்று காங்கிரஸ் கட்டாயத்தின் பெயரில் இந்திய கூட்டணியை உருவாக்கியுள்ளது. கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரசும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம் .அதேபோல் மேற்கு வங்காளத்தில் திரிணாமு காங்கிரசும் இடதுசாரிகளும், பஞ்சாபில் காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் ஒன்றுக்கொன்று எதிராக பேசுவதைப் பார்க்கலாம்.

தேர்தலுக்கு முன் தங்கள் நலனுக்காக இப்படி சண்டையிட்டு கொள்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு என்ன செய்வார்கள் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி பிராந்திய விருப்பங்கள் மற்றும் தேசிய முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது .தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்றாவது ஆட்சி காலத்தில் நாடு இன்னும் பல பெரிய முடிவுகளை எடுக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது .ஜூன் 4-ல்  400க்கும் அதிகமான தொகுதிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கும் என்று நாடு முழுவதும் கூறுகிறது .இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI


Similar News