கோவில் விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டது எப்படி நீதிபதிகள் கேள்வி?

கோவில் விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டது எப்படி என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் கேள்வி?

Update: 2022-09-06 00:49 GMT

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்துஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் நாகர்கோவில் காரி மாணிக்கபுரம் கிராமத்தில் அருள்மிகு முப்பிட ஆதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்து கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. இந்த கோவில் நிலத்தில் தான் தற்போது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.


இந்த கோவிலுக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த இடத்தில் தனி நபர்கள் குடிசை வைத்து தங்கி வந்தனர். தற்போது இந்த இடத்தில் கான்கிரீட் கட்டிடம் அமைத்துள்ளார்கள். கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் எப்படி கட்டிடம் கட்டப்பட்டது என்பது தொடர்பான கேள்வியை நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்திற்கு முன்பு வைத்துள்ளது. ஏற்கனவே தனி நபர்கள் கோவில் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்பது தொடர்பான மனு இந்து சமய அறநிலையத்துறைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தற்சமயம் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாந்த் அமர்வு இன்று விசாரணை செய்தது. இதில் கோவில் விவசாய நிலங்களில் எவ்வாறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன? என்பது குறித்து கேள்வியை திருநெல்வேலியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தர விட்டு மூன்று மாத காலத்திற்கு ஒத்தி வைத்தது.

Input & Image courtesy: News 7

Tags:    

Similar News