10 கிறிஸ்தவர்கள் வசிப்பிடத்தில் பிரார்த்தனை கூடம் கட்ட மனு - தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

நெல்லையில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.

Update: 2022-09-03 02:56 GMT

நெல்லையில் புதிதாக கிறிஸ்துவ பிரார்த்தனை கூடம் கட்டுவது தொடர்பாக மனுவை உச்ச நீதிமன்ற மதுரை கிளை தற்போது தள்ளுபடி செய்துள்ளது. கோவிலாம்பாள் புறத்தில் உள்ள கிறிஸ்தவ மத கூட கட்டிடத்திற்கு அனுமதி கூறி மனுதாரர் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மதுவை சுவாமிதாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பகுதியில் டயோசிஸ் தரப்பில் 21 சென்ட் இடம் வாங்கி அதில் பிரார்த்தனை கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால் பிரார்த்தனை கட்டுமானம்  கட்டுவதற்கான அனுமதியை உயர்நீதிமன்றம் தருவதற்கு தற்போது மறுத்துள்ளது. மேலும் அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே அனுமதி கூறி நெல்லை ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. பிரார்த்தனை கட்டிடம் கட்டுவதற்கு அங்குள்ள பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனெனில் கோவிலாம்பாள் புறத்தில் சுமார் 180 இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றது. 10 கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டும்தான் வசிக்கின்றன.


அங்குள்ள பகுதியில் 100 மீட்டர் தொலைவிலும் மற்றும் 75 மீட்டர் தொலைவிருந்தால் இரு இந்து கோவில்கள் உள்ளன. ஆனால் அந்தப் பகுதியில் மிக அருகில் பிரார்த்தனை கூடம் கட்டுவது மதப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று கூறி ஏற்கனவே நெல்லை மாவட்ட கலெக்டர் அவர்கள் அனுமதி தர மறுத்துள்ளார். மேலும் இந்த மனுவை தான் தற்போது உச்ச நீதிமன்றம் மதுரை கிளையும் நிராகரித்து உள்ளது.

0Input & Image courtesy: Hindu Tamil News

Tags:    

Similar News