சனாதன தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு : உதயநிதி ஸ்டாலின், பிரியங் கார்கே மீது வழக்கு!
சனாதன தர்மம் குறித்த சர்ச்சை பேச்சால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரியங் கார்கே மீது உத்திரபிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது . இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தங்கள் மனதை புண்படுத்தி விட்டதாக உத்தர பிரதேசத்தின் ராம்பூர் போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் ஹர்ஷ் குப்தா ராம் சிங் லோகி ஆகியோர் புகார் செய்தனர் .
இதே போல உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக மந்திரியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யின் மகனுமான பிரியங் கார்கே மீதும் அவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர் .இந்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரியங் கார்கே ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295A மற்றும் 153A போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI