ஆஸ்திரேலியா: டெல்டா வகை வைரஸ் பரவலால், ராணுவத்தை களம் இறக்கிய அரசு!

வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தை களமிறக்கிய ஆஸ்திரேலிய அரசு.

Update: 2021-07-30 13:29 GMT

உலக அளவில் பெருமளவு  பாதிப்புக்கு ஆட்படுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்தில் பெருமந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அதிகமாக உருமாறிய வைரஸ்கள் பரவும் நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.


இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் ஆகஸ்டு 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவத்தின் உதவி நாடப்பட்டு உள்ளது. அதேபோல் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து 2வது முறையாக பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்க மக்கள் தொழில் நிறுவனங்களும், வர்த்தகர்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். 

Inputs: https://www.abc.net.au/news/2021-07-30/adf-soldiers-to-arrive-in-sydney-covid19-lockdown/100336124 

Image courtesy: ABC News 

Tags:    

Similar News