இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை - மத்திய அரசு தகவல்.!

இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை - மத்திய அரசு தகவல்.!

Update: 2020-04-13 13:08 GMT

நேற்று வரை இந்தியாவில் 2,06,212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 9152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 308 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில் தான் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியர்களிடம் சந்தித்தனர்; அதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பில் பேசியது: கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் உபகரணங்கள் நாளை மறுநாள் இந்தியாவிற்கு வருகிறது. மேலும் நேற்று வரை 2,06,212 கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றறை பரிசோதனை செய்யும் வேகத்தை பற்றிய கவலை வேண்டாம். அடுத்த 6 வாரங்களுக்கு பரிசோதனை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் இருக்கிறது என்றனர். 

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2520576

Similar News