உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 24.14 கோடியை கடந்தது !

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் தென்பட்ட கொரோனா வைரஸ் சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் தனது கோரமுகத்தை காண்பித்தது.

Update: 2021-10-18 03:18 GMT

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் தென்பட்ட கொரோனா வைரஸ் சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் தனது கோரமுகத்தை காண்பித்தது. இந்த வைரஸ் தொற்று ஒரு ஆண்டை கடந்தும் இதன் வீரியம் இன்றளவும் குறைந்தபாடில்லை. அதிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 24.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 21.86 கோடிக்கும் அதிகமானோர்கள் மீண்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49.13 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை 1.78 கோடிக்கும் அதிகமானோர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதிலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகமான பாதிப்பை சந்திந்த நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நாடுகளில் தடுப்பூசி போடும் பணியானது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் இந்தியாவில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy:Opindia


Tags:    

Similar News