கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது: இங்கிலாந்து விஞ்ஞானிகள் சந்தேகம்.!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று இயற்கையாக உருவானதல்ல எனவும், இவை வூகான் ஆய்வு மையத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Update: 2021-06-01 02:51 GMT

கொரோனா வைரஸ் பெருந்தொற்று இயற்கையாக உருவானதல்ல எனவும், இவை வூகான் ஆய்வு மையத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து உலகம் முழுவதும் வைரஸ் தொற்று பரவியது. இதனால் பல லட்சம் மக்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


 



இதுவரை கொரோனா பெருந்தொற்று பரவல் நின்றபாடில்லை. அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது ஒரு சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் இன்று வரை பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் தற்போது 2வது அலையால் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.




 


இந்நிலையில், இங்கிலாந்து பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வு முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், கொரோனா வைரஸ் தொற்று இயற்கையாக உருவானதல்ல, அது வூகான் ஆய்வு மையத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.




 


ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைப்பதற்காக வவ்வாலில் இருந்து வைரஸ் உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சி செய்து வருவதாக விஞ்ஞானிகள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளனர். வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News