மனிதனின் அறிவாற்றலை பாதித்திருக்கிறது கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்?

கொரோனாவிற்கு பிறகு மனிதனுடைய அறிவாற்றல் வெகுவாக பாதித்து இருப்பதாக ஆய்வு முடிவு.

Update: 2022-12-17 04:13 GMT

கொரோனா வைரஸ் சுவாச மண்டலங்களை வெகுவாக பாதித்தது என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு தகவல் இருந்தாலும், அது மனிதனின் அறிவாற்றல் செயலையும் பாதித்து இருக்கிறது என்று பலரும் அறியாத தகவலாகவே தற்போது வரை இருக்கிறது. கொரோனா பாதித்த பலருக்கு மூளையின் செயல்பாட்டில் ஒரு மந்தம் அல்லது கண் சுனக்கு நிலை ஏற்பட்டு இருப்பது பதிவாகி இருக்கிறது. அதாவது ஒரு தகவல்களை நினைவில் வைப்பது ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்துவதும், தினந்தோறும் செய்யும் செயல்களை நினைவூட்டுதல் போன்று பற்றி சிக்கல்கள் இருந்தது. பல தரப்பிலிருந்து கூறப்பட்டு வந்த புகார்கள் தான் நீண்ட மற்றும் கடுமையான கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பிரைன் பேக் எனப்படும் மூளை மற்றும் நிலை காணப்படுகிறது.


ஒரு சிலருக்கு மாத கணக்கிலும் சிலருக்கு வருட கணக்கிலும் இந்த பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த ஆய்வின் போது கொரோனா வைரஸ் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை பாதித்திருப்பதும் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அதுவும் 25 வயது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு தான் இந்த ஒரு பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது, அந்த அதே ஆய்வில் காலப்போக்கில் நிச்சயம் இந்த குறைபாடு சரி செய்யப்படும் என்றாலும் அறிவாற்றல் செயல்பாட்டில் முழுமையாக இதன் பாதிப்பு குறைமா? என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருந்து வருகிறது.


குறுகிய கால நினைவாற்றல் எனப்படும் செயல்பாட்டு திறன் ஆனது அப்பொழுது நடக்கும் செயல்பாடுகளை நினைவில் வைத்துக்கொள்வது ஒரு பிரச்சனை வரும் பொழுது அதை இவ்வாறு சரி செய்வது போன்ற யோசனை தருவது, படிப்பது,பேசுவது,வாதம் செய்யும் பொழுது உடனுக்குடன் செயல்படுவது போன்றவற்றை தாமதமாகவே பிரதிபலிக்கிறது. எனவே பலவீனமான நினைவாற்றல் செயல்பாடு ஒரு நபரின் அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் படைத்தவர்கள் கூட நீண்ட மற்றும் தீவிரவாதிப்பு காரணமாக இந்த திறனை இழந்து விட்டதாக ஆய்வு உணர்த்துகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News