கொரோனா பாதித்த 2 வாரங்களில் இந்த பாதிப்பு ஏற்படும்: ஆய்வு முடிவில் தகவல் !

கொரோனா பாதித்த 2 வாரத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

Update: 2021-08-04 13:07 GMT

கொரோனா குறித்து மனிதர்கள் அறிந்தும் அறியாத பல மர்ம முடிச்சுகள் ஒவ்வொரு ஆய்வின் இறுதியில் பல்வேறு முடிவுகளை தருகின்றன. ஒவ்வொரு ஆய்வின் முடிவின் போது பல்வேறு தகவல்கள் மற்றும் பலரும் எதிர்பார்க்காத பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் பற்றி  வெளிவராத உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது, கொரோனா வைரஸ் தொற்று ஒருவரைத் தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக "தி லேன்செட்" பத்திரிகையில் ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபற்றிய ஆய்வை நடத்திய சுவீடன் நாட்டின் உமேயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிக்ஸ் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று தெரிவித்தார். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மற்றொரு ஆராய்ச்சியாளரான காட்சூலாரிஸ் அவர்கள் மேலும் கூறுகையில், "கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம்? என்பதை எங்கள் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக கடுமையான இதய பாதிப்பு ஆபத்தில் இருக்கிற முதியவர்கள் தடுப்பூசி போடுவது முக்கியம் என்று தெரிவித்துள்ளார். எனவே தேவையான விஷயங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலமாக நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். 

Input: https://www.indiatoday.in/amp/coronavirus-outbreak/story/increased-risk-of-heart-attack-stroke-in-first-two-weeks-following-covid-lancet-study-1836399-2021-08-03

Image courtesy: India Today news 




Tags:    

Similar News