கொரோனா நிவாரணம் என்ற பெயரில் பைபிள் விநியோகம்- 7 பேர் மீது வழக்கு பதிவு !

Breaking News.

Update: 2021-09-10 10:28 GMT

ஓசூர் அருகே கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதாகக் கூறி பைபிள் வழங்கியதை இந்து அமைப்புகள் எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து அமைப்புகள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் செவன்த்டே அட்வென்டிஸ்ட் அறக்கட்டளை சார்பில் முக கவசம், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்படுவதாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனால் இந்த நிகழ்வில் பைபிள் மற்றும் கிறிஸ்தவ மதம் குறித்த புத்தகங்கள் நிவாரணப் பொருட்களுடன் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதை அறிந்த விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்பினர், நிவாரணம் என்ற பெயரில் மதம் மாற்ற முயல்வதாக கூறி அங்கிருந்த அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாகவும் மதமாற்றம் செய்ய முயல்வதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலரும் இதுகுறித்து புகார் அளித்த நிலையில் செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி மற்றும் அறக்கட்டளை இயக்குனர் பண்டிட் விஸ்வா, பள்ளி மேலாளர் ஜெபராஜன், அந்தோணிதாஸ் உட்பட ஏழு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source: Hindu Post

Tags:    

Similar News