கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு அறிவித்த புதிய திட்டம் !

கொரோனா தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 18 வயது 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்

Update: 2021-08-05 14:20 GMT

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த வருடம் மே 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் கொரோனாவால் பெற்றோர் அல்லது காப்பாளர்களை இழந்த குழந்தைகள் 23 வயதை எட்டும்போது அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணமும் மாதந்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தியுள்ளன. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை 30,071 குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனா தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 18 வயது 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் இந்த நிதி பி.எம் கேர்ஸ் நிதியில் இருந்து செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயது வரை மாத உதவித்தொகையும், 23 வயது அடையும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : தினமலர்


IMAGE COURTESY : The Economic Time


Tags:    

Similar News