கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவலால் மிகவும் பாதிக்கப்பட்டு தவித்து கொண்டு இருந்தது. சீனாவில் இருந்த வுஹான் மாநிலத்தில் தான் முதல் பாதிப்பை ஏற்பட்டது. இவ்வாறு இருக்கையில் அது உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் சீனா வேண்டுமென்றே இந்த வைரஸை உலகம் முழுவதும் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர்.
இவ்வாறு இருக்கையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடேன் அவர்கள் உளவுத்துறை மூலம் கோவிட்-19 ன் தோற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் "இந்த வைரஸ் இரண்டு விதமாக மட்டுமே பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. அதில் ஒன்று மனிதன் இந்த நோய் வாய்ப்பட்ட விலங்குடன் தொடர்பு ஏற்பட்டால், மற்றோன்று ஆய்வகத்தில் ஏற்பட்டிருக்கும் விபத்து மூலமாக பரவ வாய்ப்பிருக்கிறது. இதில் ஆய்வகத்தில் ஏற்பட்டிருக்கும் விபத்து மூலமாகவே இந்த வைரஸ் பரவிருக்க அதிக வாய்ப்பு உள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
திரு. ஜோ பைடேன் அவர்கள் தங்களுடைய உளவுத்துறை அதிகாரிகளை மேலும் தகவல்களை சேகரித்து இதற்கு ஒரு முடிவு தெரிவிக்கும் ஆய்வு அறிக்கையை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் மனம் பொருந்தும் நாடுகளுடன் இனைந்து செயல்பட்டு சீனா மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவித்தார்.