நீதிக்காக திருச்சபையை அணுக வேண்டும் நீதிமன்றத்தை அல்ல - CSI சுற்றறிக்கைக்கு தடை!

நீதிக்காக திருச்சபையை தான் அணுக வேண்டும் நீதிமன்றத்தை நேரடியாக அணுக கூடாது என்று CSI சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-06 08:20 GMT

CSI நிர்வாகம் தொடர்பாக தற்பொழுது திருமண்டலம் தூத்துக்குடி- நாசரோத் திருமண்டல துணைத் தலைவர் பிறப்பித்த உத்தரவின் படி, நீதிமன்றத்தை நேரடியாக யாரும் அணுகக் கூடாது என்று கூறி குறிப்பிடும் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தேவசகாயம் என்பவர் மூலமாக கொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கின் விசாரணை தான் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.


அதாவது CIS என்று குறிப்பிடப்படும் தென்னிந்திய திருச்சபையின் அங்கீகரிக்கப்படும் தூத்துக்குடி நாசரோத் திருமண்டல துணைத்தலைவர் தற்பொழுது ஒரு புதிய சுற்றறிக்கையை பிறப்பித்து இருக்கிறார். குறிப்பாக அந்த சுற்றெடுக்கையில் நீதிக்காக யாரும் நேரடியாக நீதிமன்றத்தை நாடக்கூடாது. முதலில் தங்களுடைய பிரச்சனையை திருச்சபை முன்பாக தான் எடுத்துரைக்க வேண்டும். திருச்சபையின் முடிவுகளுக்கு தங்கள் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.


மேலும் அவ்வாறு மறுக்கும் குடும்பங்களுக்கு அல்லது அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு திருச்சபை மூலமாக வழங்கப்படும் எந்த ஒரு நன்மைகளும் வழங்கப்படாது. குறிப்பாக திருச்சபையில் அவர்களுக்கு திருமணம், சடங்கு அல்லது கல்லறை தொடர்பான விஷயங்கள் போன்ற எந்த ஒரு விஷயங்களிலும் திருச்சபை தலையிடாது. நீங்கள் திருச்சபைக்கு வரவும் கூடாது. தங்கள் முழுமையான உரிமை பறிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனை எதிர்த்து தான் தற்பொழுது பொது நல வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதனை விசாரித்த மதுரை கிளை நீதிபதிகள் தற்போது சி.எஸ்.ஐ பிறப்பித்த இந்த ஒரு சுற்றறிக்கைக்கு இடைக்கால தடையை விதித்து இருக்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாக கூறி இந்த தடை போடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Dinamalar News

Tags:    

Similar News