கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: குருவாயூர் கோவிலில் கடும் கட்டுப்பாடு!

கேரளாவில் அதிகரித்து வரும் தொற்று கொண்டு, கோவில்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

Update: 2022-01-21 00:30 GMT

இந்தியாவில் அதிகரித்து கொண்டிருக்கும் நோய்தொற்றுக்கு இடையில் கேரளாவில் தற்போது பாதிப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறதாம். இதனால் அங்கு உள்ள கோயில்களில் தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கோவில்கள் மூலமாக இந்த நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் மேலும் தகவல்களை கூறுகின்றார்கள். கோவில் மேற்கொள்ளும் திருவிழாக்கள் மற்றும் விசேஷ தினங்கள் அனைத்தையும் பக்தர்களுக்கு அனுமதி கிடைப்பது ரத்து செய்துள்ளது. 


கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவிலில் 3,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் கட்டுப்படுத்தப்படும். மேலும் கோவிலில் திருமண ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு,  திருமணத்திற்கு புகைப்படக் கலைஞர்கள் உட்பட 12 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். மறு அறிவிப்பு வரும் வரை குழந்தைகளுக்கான சோறு போடும் விழா நிறுத்தப்பட்டு, விழாவிற்கு முன்பதிவு செய்தவர்களுக்கு கோவிலில் இருந்து பிரசாத கிட் வழங்கப்படும்.


மேல்பத்தூர் ஆடிட்டோரியத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. பிரசாத ஊட்டு இருக்காது. புதன்கிழமை முதல் தினமும் 500 பேருக்கு காலை உணவும், 1,000 பேருக்கு மதிய உணவும் பார்சலாக வழங்கப்படும். இருப்பினும், கோவிட்-19 நெறிமுறைகளைப் பராமரிப்பதன் மூலம் துலாபாரத்திற்கான வசதி ஏற்பாடு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.  

Input & Image courtesy: The Hindu



Tags:    

Similar News