சுற்றுச்சூழல் நலன் கருதி பழைய வாகனங்களை அழிக்க முடிவு - மத்திய அரசு புதிய கொள்கை!

சுற்றுச்சூழல் நலன் கருதி மத்திய ஆயுதப்படைகளின் 11 ஆயிரம் பழைய வாகனங்களை அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2023-10-17 16:30 GMT

பழைய வாகனங்கள் ,சுற்றுச்சூழலுக்கு மாசுவிளைவித்து வருகின்றன. எரிபொருளை அதிகமாக குடிக்கின்றன. எனவே 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை அழிக்கும் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டிலும் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக எல்லை பாதுகாப்பு படை மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை , அசாம் ரைபிள்ஸ், இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் தேசிய பாதுகாப்பு படை போன்ற மத்திய ஆயுதப்படைகளின் வாகனங்களில் 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை அடையாளம் கணிப்பணியில் மதிய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டது.


இந்த படைகளுக்கு நாடு முழுவதும் மொத்தம் 1,00,000 மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அவற்றில் 15 ஆண்டுகள் கடந்த 11 ஆயிரம் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய அரசு கொள்கைப்படி அந்த வாகனங்களை படிப்படியாக அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்காக சுற்றுச்சூழல் நலன் கருதி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News