தாமரையுடன், மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் இங்கிலாந்து அரசு !
இங்கிலாந்து அரசு ஒவ்வொரு ஆண்டும் உலக தலைவர்களில் சிறந்து விளங்கியவர்களை கவுரவம்படுத்தும் விதமாக அவர்களின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக மிகவும் அகிம்சை வழியில் தந்தை மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை இங்கிலாந்து அரசு வெளியிடுகிறது.

இது குறித்து இங்கிலாந்தின் பொருளாதா பிரிவு தலைவர் ரிசி சுனாக் கூறுகையில், ''மகாத்மா காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அரசு அவரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகிறது. அந்த நாணயம் தங்கம் மற்றும் வெள்ளியில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வட்ட வடிவில் அந்த நாணயம் இருக்க உள்ளது. ஆனால் இது சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கு அல்ல.
அந்த நாணயத்தில் இந்திய நாட்டின் தேசிய மலரான தாமரை உருவமும், மகாத்மா காந்தியின் முழக்க வரிகளான 'என் வாழ்க்கையே உங்களுக்கான அறிவுரை' என்ற வரிகளும் ஆங்கிலத்தில் இடம்பெற உள்ளது'' என்று கூறினார். இங்கிலாந்து அரசு மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடுவது அனைத்து இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi