மும்பை: டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட முதல் உயிரிழப்பு !

உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட மும்பையில் முதல் உயிரிழப்பு.

Update: 2021-08-13 13:43 GMT

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவார்கள் அதிகமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது, மும்பையில் இந்த உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக ஒருவரின் உயிர் இழப்பு மக்கள் மத்தியில் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மூன்றாவது அறை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உள்ள இந்த சூழ்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


அதிலும் மும்பையில் 63 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி அன்று, டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு தற்போது உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணுக்கு நீரிழிவு உட்பட பல நோய்த்தொற்றுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் ரத்னகிரியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மரணத்துக்கு பிறகு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு காரணமாக மகாராஷ்டிராவில் பதிவாகும் இரண்டாவது மரணம் இதுவாகும்.


இந்தியாவில் டெல்டா பிளஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. மும்பை நகரத்தில் இதுவரை டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உயிரிழந்த இந்த பெண் உட்பட 7 பேருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு பிறகும், வீரியமான உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் இந்த முடிவுகள் நமக்கு காட்டுகின்றன. 

Input: https://m.timesofindia.com/city/mumbai/mumbai-delta-victim-had-lung-disease-two-contacts-also-ve/amp_articleshow/85286337.cms

Image courtesy: times of India




Tags:    

Similar News