டெல்டா வைரஸால் ஏற்படும் உயிர் இழப்பைத் தவிர்க்க தடுப்பூசியால் முடியுமா ?

உருமாறிய டெல்டா வைரஸ்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க தடுப்பூசிகள் மட்டும்தான் முடியும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Update: 2021-09-11 13:49 GMT

 உலக நாடுகள் பலவற்றில் தற்போது கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரசால் பல நாடுகளில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக பல நாடுகள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதைத்தான் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், அமெரிக்க நோய்த் தடுப்பு மைய இயக்குநர் ரோச்சல்லா வெலன்க்சி இதுபற்றி கூறுகையில்," நாங்கள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டதில், கொரோனா தடுப்பூசிகள் சிறப்பாக வேலை செய்வது தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் தொற்றால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவு. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 10 மடங்கு வாய்ப்பு குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


அதைத்தான் தற்போது இந்தியாவின் ICMR-ன் இயக்குனரும் தற்பொழுது கூறியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் குறிப்பாக தங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இதிலிருந்து தெரியவருகின்றது.  

Input & image courtesy:Timesofmalta.



Tags:    

Similar News