அமெரிக்கா: டெல்டா வைரஸ் தாக்கம் குழந்தைகளிடம் இருக்கிறதா ? ஆய்வு முடிவு !
அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின்படி, டெல்டா வைரஸ்கள் தாக்கம் குழந்தைகளிடம் குறைவாகவே இருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின்படி, "டெல்டா வைரஸ் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் நடத்தியுள்ள ஆய்விலிருந்து, அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் முதலே டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா பரவல் தீவிரமடைந்தது. டெல்டா வைரஸ் காரணமாகத் தொற்று அதிக எண்ணிக்கையில் பரவியது. மேலும் இந்த டெல்டா வைரஸ்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்த அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் கூறுகையில், "ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 0-17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலேயே டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டனர். மேலும் குழந்தை நல மருத்துவமனைகளில் அளித்துள்ள புள்ளிவிவரங்களின் படி குழந்தைகள் டெல்டா கொரோனா வைரஸ் காரணமாக தீவிர பாதிப்புக்குள்ளாகவில்லை என்பது தெரியவருகிறது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விரைவில் அதற்கான அனுமதி கிடைப்பின் கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை எளிதில் பாதுகாக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இத்தகைய சூழலில் இந்தியாவிலும் விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பணி விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Image courtesy:NDTV news