பழனி ஆண்டவர் கோவில்: ரோப் கார் சேவையில் பழைய கட்டணத்தை விரும்பும் பக்தர்கள்!

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அங்கீகரிக்கக் கோரிக்கை வைக்கும் பக்தர்கள்.

Update: 2022-04-03 01:47 GMT

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. மேலும் இந்தக் கோவிலில் தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தந்துள்ளார்கள். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. 


ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு 15 ரூபாயும், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு 50 ரூபாயும் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்தில் இருந்து 15 ரூபாய் சேவை கட்டணம் அமலில் இல்லை தற்போதுவரை ஐம்பது ரூபாய்தான் சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பக்தர்கள் அதிகமாக கோவிலுக்கு வருகை தர ஆரம்பித்துள்ளார்கள் இத்தகைய சூழ்நிலையில் பழைய கட்டடத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர கோரி பல்வேறு பக்தர்கள் பழனி கோவில் நிர்வாகத்திடம் தங்களுடைய கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். 


இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்களும் பழனி ரோப்காரில் பயணிக்கும் வகையில் 15 ரூபாய் கட்டண முறை இருந்தது. ஆனால் தற்போது 50 ரூபாய் கட்டண முறை மட்டுமே உள்ளதால் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் 10 பேர்கொண்ட குடும்பத்துடன் வரும்போது ரோப்காரில் சென்றுவர ரூ. 500 செலவாகிறது. ஆனால் 15 கட்டண சேவை இருந்தால் 150 ரூபாய் மட்டுமே செலவு ஆகியிருக்கும். அதாவது 3 மடங்கு பணம் விரயமாகிறது. எனவே மீண்டும் ரோப்கார் சேவையில் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Input & Image courtesy: ABP News

Tags:    

Similar News