தடுப்பூசிக்கு பின் நீங்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படும் உணவுப்பட்டியல் !
தடுப்பூசிக்கு பின்பு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியல்.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு வரும் இந்திய அரசு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் முன்னெச்சரிக்கை செயல்முறையையும் மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. பல லட்சக்காணக்காண மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு என்ன செய்வதென்று தெரியாததால் பல தவறான செய்திகளை பரவுகின்றன. அது போன்ற தவறான செய்திகளை பார்த்து நீங்களும் குழம்பிப்போய் இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு என்னென்ன பொருட்களை நாம் உட்கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும் விரைவில் போடப்போகிறீர்கள் என்றாலும் முடிந்தவரை அதிகமாக தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு முக்கியமாக வழி ஆகும். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தசை வலி, சோர்வு, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்படும். போதுமான அளவு தண்ணீரைக் குடித்து சீரான நீரேற்றத்துடன் இருப்பது உங்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்கவும், பக்கவிளைவுகளின் தீவிரத்தையும் குறைக்க உதவும்.
சீரான ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் தீவிர பக்க விளைவுகளை தவிர்க்க, சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். பச்சை காய்கறிகள், மஞ்சள், கீரைகள் மற்றும் பூண்டு, அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் ஆகியவற்றை உங்கள் உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
Image courtesy: timesof india