அறியாத மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் - சென்னையில் தொடங்கிய டிஜிட்டல் கண்காட்சி!
அறியாத மக்கள் நல திட்டங்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த டிஜிட்டல் கண்காட்சி.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் முனைவர் எல் முருகன் திங்களன்று இக்கண்காட்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் மூன்றாம் நாளான இன்று கவிஞர் நந்தலாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "இலக்கியம் படி: இதயம் விரியும்" என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே உரையாற்றினார். சொல்லாற்றலை விட மனித நேயமும், மாண்புமே உலக மக்களை இணக்கத்துடன் வாழ்விக்க உதவும் என கவிஞர் நந்தலாலா கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், தனிமனித வளர்ச்சிக்கு அன்பு, அறிவு அவசியம் என்றார். அதே நேரம் மனித நேயத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். செயலாற்றலை விட மனித நேயமும், மாண்புமே உலக மக்களை இணக்கத்துடன் வாழ்விக்க உதவும் என்றும், மனிதர்களை மாண்புடன் வாழ வைப்பதில் இலக்கியங்களின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News