விஜய் ஹசாரே டிராபியில் தினேஷ் கார்த்திக் அதிரடி! தமிழ்நாடு அணி அபார வெற்றி!!

விஜய் ஹசாரே டிராபியில் தினேஷ் கார்த்திக் அதிரடி! தமிழ்நாடு அணி அபார வெற்றி!!

Update: 2019-10-02 07:21 GMT

தினேஷ் கார்த்திக் 62 பந்துகளில் 97 ரன்கள் விளாசினார், விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பாதித்தது.


விஜய் ஹசாரே டிராபியில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் மோதியது . இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணி பேட்டிங் ஆடியது.


தொடக்க பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டத்தில் வெளியேறினார்.பின்பு விஜய் சங்கர் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து ஆடினார் . இந்த ஜோடி ஓரளவிற்கு விளையாடியது. பின்பு விஜய் சங்கர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.


தினேஷ் கார்த்திக் உடன் ஷாருக் கான் ஜோடி சேர்ந்து . அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


பின்னர் தினேஷ் கார்த்திக் 62 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


ஷாருக்கான் 45 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் 50 ஓவர்களில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது .


பின்னர் 287 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய பெங்கால் அணி முதல் நான்கு வீரர்களையும் ஒற்றையிலக்க ரன்னில் தமிழ்நாடு பந்து வீச்சாளர்களான நடராஜன் மற்றும் விக்னேஷ் ஆகியோ் வெளியேற்றினர்.


இதனால் பெங்கால் அணி 21 ரன்களில் 5 விக்கெட்டுக்களை இழந்தது. ஷபாஸ் அகமது 107 ரன்கள் அடித்தாலும், பெங்கால் அணி 212 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை குவித்தது.


Similar News