திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றம், காதலிக்கு கொலை மிரட்டல் - சி.எஸ்.ஐ பயிற்சி பாதிரியார் கைது!
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றம். மாணவிக்கு கொலை மிரட்டல்.. மதகுரு கைது!
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள கோரிப்பாளையம் அன்பகத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ். இவரின் மகன் மில்டன் கனகராஜ். மில்டன் இளநிலை கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பி.டி படித்துள்ளார். தற்போது கேடிசி நகர் சிஎஸ்ஐ கிறிஸ்டியா நகர் ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக உள்ளார். இவர் வசித்து வந்த கிறிஸ்டியா நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மில்டன் பணியில் சேர்ந்த நாள் முதல் மில்டன் குடும்பத்துடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இருவரும் பழகி வந்த நிலையில் கல்லூரி மாணவியிடம் திருமண செய்வதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்தும் நெருக்கமாக பழகியும் வந்துள்ளார். மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கைப்பேசி ஒன்றினை வாங்கி கொடுத்தும் பேசி வந்துள்ளார். இதனிடையில் மில்டனின் பெற்றோர் மில்டனிற்கு திருமணம் செய்ய பெண் பார்த்துள்ளனர். இதனை அறிந்த மாணவி வேறு பெண்ணை திருமணம் செய்வது குறித்து விசாரித்த போது கோபம் கொண்ட மில்டன் மாணவியை மிரட்டி உள்ளார். அதன் பின் மாணவியின் பெற்றோரையும் அவதூறாக பேசியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் மாணவியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பாளை காவல் துறையினரிடம் புகார் அறிவித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிஎஸ்ஐ பயிற்சியாளரான மத குரு மில்டன் கனகராஜ் கைதான சம்பவம் அப்பகுதியை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.